பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்.. ஷாக்கில் நெட்டிசன்கள்!!

85

பிரேசில்..

அந்த வகையில், பிரேசில் நாட்டி வசிக்கும் Meirivone Rocha Moraes (37) வயதாகும் இளம்பெண்ணொருவர் நீண்ட நாட்கள் தேடியும் கணவராக ஒரு ஆண் கிடைக்க வில்லை என வறுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவரின் அம்மாவிடம் கூறிய போது குறித்து பெண்ணிற்கு கணவராக அவர் ஒரு பொம்மையை கொடுத்துள்ளார். Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மை தன்னுடைய நிஜ கணவனாக ஏற்றுக் கொண்டு அந்த பொம்மையுடன் குறித்த பெண் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பொம்மையுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தையை பெற்றெடுப்பது போன்று அலப்பறை செய்துள்ளார். இது ஒரு புறம் இருக்கையில், தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வரவழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.


மேலும் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அடுத்து ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர்

தன்னுடைய கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகளின் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.