போலீஸ்காரரின் மனைவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

363

வேலூரில்..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (35). இவர் வேலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவரும் செஞ்சியைச் சேர்ந்த பவித்ரா (32) என்பவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பவித்ரா, நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறினார்.


பின்னர் அதிகாலை 5 மணியளவில் வேலூர் கஸ்பா ரயில்வே மேம்பாலம் அருகே கண்டோன்மெண்ட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.