மகனைக் கொன்ற தாய்.. காவல் நிலையத்தில் கணவனுடன் வாக்குவாதம் : யார் காரணம்?

303

மேற்குவங்கத்தில்..

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சேர்ந்தவர் சுச்சானா சேத் (39). இவரது கணவர் வெங்கட் ராமன். இருவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 4 வயது மகன் இருந்தார். சுச்சானா சேத் பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். வெங்கட் ராமன் இந்தோனேசியாவில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இருவருக்கும் கடந்த இரு ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளது. விவகாரத்து செய்யும் முடிவில் இருந்து வந்தனர். இந்நிலையில் சுச்சானா சேத், தனது 4 வயது மகனுடன் கடந்த 6ஆம் தேதி கோவா சென்றார். அங்குள்ள தனியார் விடுதியில் தன் மகனை கொன்று 8ஆம் தேதி வாடகை கார் மூலம் பெங்களூரு திரும்பினார். விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் கோவா காவல்துறையினர் மற்றும் கர்நாடக காவல்துறையினரின் உதவியோடு சுச்சானா சேத்தை சித்ரதுர்காவில் கைது செய்தனர்.

அவர் கொண்டுவந்த சூட்கேஸில் 4 வயது மகனின் உடல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் 4 வயது மகனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தலையணை அல்லது துணி மூலமாக குழந்தையை அழுத்தி கொலை செய்திருக்கலாம் என்றும், கழுத்திலும், உடலிலும் எவ்வித ரத்த காயமும் இல்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தந்தை வெங்கட்ராமனிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடலை பெங்களூரு கொண்டுவந்து அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே போலீஸ் காவலில் இருக்கும் சுச்சானா சேத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான பிரச்னைகள் குறித்து தனித்தனி வாக்குமூலங்கள் பெற வேண்டி இருந்ததால், வெங்கட்ராமனை காவல் துறையினருக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

காவலில் இருக்கும் சுச்சானா சேத்தும், வெங்கட் ராமனும் நேருக்கு நேர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கலங்குட் காவல் நிலையத்தில் இருவரின் சந்திப்பு நடந்தது. அப்போது வெங்கட்ராமன் தனது மனைவியிடம் தனது குழந்தையை ஏன் கொலை செய்தாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்றும் இந்த சம்பவத்திற்கு காரணம் வெங்கட் ராமன் தான் என்றும் கூறியுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறுகின்றனர்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டதாகவும்அதன்பின் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தனது வாக்குமூலத்தை வெங்கட்ராமன் பதிவு செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்பின் வெங்கட் ராமன் அனுப்பி வைக்கப்பட்டார். வெங்கட்ராமனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சுச்சானா சேத்திடம் விசாரணை நடைபெறுவதாக கூறுகின்றனர்.