மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம் : இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ!!

1465

திருமணம்…

 ’காம்ரேட் ஃப்ரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில், மசூதியில் இந்து திருமணம் நடத்தப்படும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என ட்விட் போட்டுள்ளனர்.

இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘மனித குலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் இந்து முறைப்படி, ஒரு மசூதியில் திருமணம் நடத்தியிருப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்த குடும்பத்தை சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு, மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்க பணம் கொடுத்துள்ளது.

ஏற்கனவே மத ரீதியான பல பிரச்சனைகள் உண்டாகியிருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏர். ஆர் .ரகுமான் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.