மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கழுத்தறுத்து கொலை!

932

தமிழகத்தில் தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (50). ஓட்டுநரான இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் தகராறு செய்து வந்ததாகவும், மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் ராஜசேகர், மனைவி, தாய், மகனிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனைவி சுகுணா (40), மகன் ரவிவர்மன் (23), தாய் செல்வி (70) ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராஜசேகரின் மனைவி சுகுணா, தாய் செல்வி, மகன் ரவிவர்மன் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.