மனைவி மயங்கிவிழுந்துவிட்டதாக உறவினருக்கு போன் செய்த கணவர்… இறுதியில் அரங்கேறிய கொடுமை அம்பலம்!

801

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாளம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு கிராமத்தில், ஐயப்பன் 8 ஆண்டுகளுக்கு முன்பு அகிலாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஐயப்பன் அகிலாவை குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அகிலா குடும்பத்தினருக்கு, அகிலா மயக்கமடைந்து மருத்துவமனையில் இருப்பதாக ஐயப்பன் குடும்பத்தினரிடம் இருந்து தகவல் வந்ததை அடுத்து, பதறிப்போய் ஓடிய பெற்றோருக்கு, அகிலா இறந்துவிட்டதாக தெரியவந்தது.


இதனை அடுத்து, பொலிஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஐயப்பன், தான் தான் மனைவி அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.