மழையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!

52

தமிழகத்தில்..

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி சென்றபோது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் என்ற இளைஞர் பெருங்களத்தூர் ஏரிக்கரை அருகே சாலையில் குடைபிடித்தபடி சென்றுள்ளார். செல்போன் பேசியபடி சென்ற அவர் கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.


அவரது செல்போன் லேசாக கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.