மிக ஆபத்தனாது! ‘காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க’: EIA2020-க்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு!!

1520

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவுக்கு (EIA) நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளன.

இந்த வரையில் உள்ள திருத்தங்கள் தமிழகத்திற்கு எதிரானவை என்று எதிர்க்கட்சிகள் உட்பட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருக்னறினர்.

இந்நிலையில், விவசாயிகளுக்காக நடிகர் கார்த்தி நடத்தி வரும் ‘உழவன் அறக்கட்டளையும் EIA2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.


இதை நடிகர் கார்த்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது கார்த்தியின் பதிவை மேற்கொள்காட்டிய நடிகரும்,

கார்த்தியின் சகோதாரருமான சூர்யாவும் EIA2020-க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. என EIA2020-க்கான எதிரப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.