முதல் திருநங்கை பாடி பில்டர் விஷம் குடித்து தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

702

கேரளா…..

கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றவர் பிரவீன்நாத். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பியான பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன்.

பிரவீன் சமூக வலைதளங்களில் தங்களுக்கு எதிரான தவறான பிரசாரங்களை மறுத்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 இவரது மரணம் கேரளாவில் பேரும் அதிர்வையும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது. பிரவீன்நாத் திருநங்கையாக இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர்.

இந்த நிலையில், பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

பூச்சி மருந்தை உட்கொண்ட ரிஷானா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷானா ஐஷு முன்னாள் மிஸ் மலபார் ஆவார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரவீன் மற்றும் அவரது மனைவி மீதான சமூக வலைதளங்கள் மூலம் வந்த செய்திகள் தற்கொலைக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரவீன்நாத்தின் தற்கொலை குறித்து திருநங்கைகள் இந்த மரணத்திற்கு ஆன்லைன் ஊடகங்களே காரணம் எனக்கூறி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.