மூளையை தின்னும் அமீபா!… அமெரிக்காவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!!

971

அமெரிக்காவில் மிகவும் அரிய வகையான மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

நெக்லேரியா ஃபௌலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபா, மூளையில் தொற்றினை உண்டாக்கினால், ஒரு வாரத்தில் உயிரிழந்து விடுவார்கள். பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

எனவே இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என ஃபுளோரிடாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஹில்ஸ்பாரோ கவுன்டி மக்களுக்கு ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்துறை ஜூலை 3ம் தேதி விடுத்த எச்சரிக்கை செய்தியில், குழாய் தண்ணீர் அல்லது வேறு எந்த தண்ணீராக இருந்தாலும் மூக்கில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


ஏரி, ஆறு என திறந்தவெளி நீராதாரத்தையும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்ற போதிலும், கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த அமீபாவால் பாதிப்பு நிகழ்கிறது.