யாழில் வயோதிப பெண்ணை கத்திமுனையில் அச்சுறுத்தி கொள்ளை… சீ.சி.ரி.வி கமரா உதவியுடன் சிக்கிய மூவர்!

949

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை கத்திமுனையில் அச்சுறுத்தி 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8ம் திகதி பட்டப்பகலில் மகேஸ்வரி (வயது78) என்ற பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகையை கொள்ளையிட்டு சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார்,

புன்னாலை கட்டுவன் மற்றும் ஏழாலை பகுதிகளை சேர்ந்த 3 போரை கைது செய்துள்ளனர். கொள்ளை இடம்பெற்ற பகுதியில் இருந்த சீ.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களும்,


மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.