ரீல்ஸ் செய்யாதே.. கண்டித்த கணவன் : ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்!!

214

பீகார்…

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார். இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ரீல்ஸ் செய்யும் போது கணவர் மகேஷ்வர்குமார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.


இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்ததால், மனைவி ராணி குமாரி ஆத்திரத்தில் கணவர் மகேஷ்குமாரின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். பின்னர், மகேஷ்வர் குமாரின் சகோதரர் கொல்கத்தாவில் இருந்து இரவு போன் செய்கிறார்.

அப்போது, ​​வேறொருவர் போனில் பேசியதால் சந்தேகமடைந்த மகேஷ்வர்குமாரின் அண்ணன், தந்தையிடம் நேரில் சென்று பார்க்கச் சொன்னார். இதையடுத்து, மகேஷ்வர் குமாரின் தந்தையும் சென்று பார்த்தபோது, ​​சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மகேஷ்வர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி ராணி குமாரி மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.