லண்டனில் சகோதரி கண் முன் 13 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! முதன் முறையாக வெளியான புகைப்படம்!!

899

லண்டனில் கார் விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் அழகான மகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Barnet-ல் இருக்கும் Longmore அவென்யூவில் கடந்த ஜுன் மாதம் 29-ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் இரண்டு பேர் கார் மோதிவிட்டதாக கூறி பொலிசார் உடனடியாக அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள், துணை மருத்துவர்களும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு 13 வயது மதிக்கத்தக்க Victoria Carson என்று சிறுமி படுகாயமடைந்த படி இருந்தார்.


இதனால் உடனடியாக அவர் வடக்கு லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அன்று இரவு 11 மணிக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது, அவரது 15 சகோதரியும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கு உடல் அளவில் காயமில்லை, கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Victoria Carson பெற்றோரான கேரி மற்றும் ரோக்ஸன்னா கார்சன் தங்கள் மகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதில், எங்கள் அழகான மகள் Victoria Carson இழப்பில் எங்கள் குடும்பம் பெரும் பாதிப்படைந்துள்ளது, அவர் எங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தார்.


Victoria Carson பல நண்பர்களால் மிகவும் நேசிக்கப்பட்டார், பூனைகளைப் பராமரித்தல் மற்றும் டென்னிஸ் விளையாடுவது போன்றவை பிடிக்கும்.

Victoria Carson-ன் புன்னகையையும், அவளுடைய சிரிப்பையும், ஆற்றலையும் நாங்கள் ஆழமாக இழப்போம், ஆனால் எங்கள் அழகான, தாராளமான மகள் எப்போதும் எங்கள் இதயத்தில் நிலைத்திருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

விக்டோரியாவின் 15 வயது சகோதரி விபத்து ஏற்பட்டபோது இருந்தார். அவள் அதிர்ச்சியடைந்தாள் ஆனால் உடல் ரீதியாக காயமடையவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 41 வயது பெண் டிரைவர், ஆபத்தான வாகனம் ஓட்டுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அந்த பெண் மீது ஆபத்தான வாகனம் ஓட்டியதால் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.