லண்டனில் வெளியிடப்படும்… புக்கர் பரிசு போட்டியாளர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண்! குவியும் வாழ்த்துக்கள்!!

877

லண்டனில் புக்கர் பரிசு 2020-க்கான போட்டியாளர் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர் இடம் பெற்றுள்ளதால் அவர் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சிறந்த எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 1969-ஆம் ஆண்டில்இருந்து புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நாவல்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு லண்டனில் வெளியிடப்படும். அதன் பின் புத்தகத்தில் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவர்களின் பெயர்கள் நவம்பர் மாதம் வெளியிடப்படும்.


இந்தாண்டுக்கான போட்டியில் இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர் அவ்னி தோஷியின் பர்ன்ட் சுகர் என்ற புத்தகம் தெரிவு செய்யப்பட்டு விருது பெறும் போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

யு.எஸ்,சில் பிறந்து தற்போது துபாயில் வசித்து வரும் இந்தியவம்சாவளியான அவ்னி தோஷி கடந்த ஆண்டு இந்தியாவில் கேர்ள் இன் ஒயிட் காட்டன் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். தற்போது போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பர்ன்ட சுகர் கடந்த வாரம் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது நினைவு கூரத்தக்கது.