லவ் டுடே இவானாவின் புகைப்பங்களை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

75

இவானா..

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவில் திறமையும், அழகையும் காட்ட வந்த இளம் நடிகைகளில் இவானாவும் ஒருவர். இவர் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அப்படி நடித்துக்கொண்டிருந்தவரை இயக்குனர் பாலா தான் இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் இவரை நடிக்க வைத்தார்.

அப்பாவி சிறுமியாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்தார். ஆனால், கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கிய லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

இந்த படம் மூலம் தெலுங்கிலும் பிரபலமாகியுள்ளார். அங்கும் இவருக்கு இப்போது வாய்ப்புகள் வருகிறது. லவ் டுடே ஹிட்டுக்கு பின் ஹரிஸ் கல்யாண் நடித்த எல்.ஜி.எம் படத்தில் நடித்தார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழில் தயாரித்த முதல் திரைப்படம் இது. இப்போது கள்வன், காம்ப்ளக்ஸ் என சில படங்களில் நடித்து வருகிறார்.


வளர்ந்து வரும் இளம் நடிகையான இவனா அவ்வப்போது கட்டழகை தூக்கலாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து போஸ் கொடுத்து இவானா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.