லென்ஸ் அணிந்துகொண்டு தூங்கினால் இவ்வளவு பெரிய ஆபத்தா? ஜாக்கிரதை… பார்வை கூட பறிபோகலாம்!

965

கண் பார்வை பாதிப்புள்ளவர்கள் கண்ணாடி அணிந்து கொள்வார்கள். ஒரு சிலர் கண்ணாடி அணிவதற்கு மாற்றாக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்வார்கள்.

தற்போது காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்வது ஸ்டைலாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதில் பல ஆபத்துக்களும் உள்ளன.

இனி லென்ஸ் அணிந்தபடி உறங்குவதால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து அறிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்.

  • உங்கள் கண்களில் உள்ள கார்னியா என்னும் விழி வெண்படலத்திற்கு ஆக்சிஜன் தேவை.
  • நீங்கள் லென்ஸ் அணிந்தபடி உறங்குவதால் கார்னியாவிற்கு குறைவான காற்று கிடைக்கிறது. கார்னியா வீக்கமடைவதால் ஆக்சிஜன் அளவு குறையலாம் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
  • இந்த வீக்கம் மிகப்பெரியது அல்ல என்றாலும், கண் மேற்பரப்பு அணுக்கள் மத்தியில் சிறு இடைவெளியை உண்டாக்கக்கூடும்.
  • இந்த இடங்களில் பாக்டீரியாக்கள் படிய நேரலாம். இதனால் கண் தொற்று ஏற்படக்கூடும்.

  • கண்களில் லென்ஸ் அணிந்தபடி உறங்குவதால் கண் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது.
  • லென்ஸ் அணிந்து உறங்குவதால் கண் தொற்று ஏற்படுவதற்கான பாதிப்பு 6 முதல் 8 மடங்கு வரை அதிகரிக்கிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவிக்கிறது.
  • பாக்டீரியாக்கள் எளிதில் லென்ஸில் படிவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் தூங்குவதற்காக கண்களை மூடும்போது, அடிப்படையில் இரவு முழுவதும் உங்கள் கண்களுக்கு எதிராக பாக்டீரியாவை வைத்திருக்கிறீர்கள்.
  • லென்ஸ் அணிந்து கொண்டு உறங்குவதால் ஒருவேளை உங்களுக்கு கண் தொற்று ஏற்படவில்லை என்றாலும், கண் எரிச்சல் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் உறங்கும்போது உங்கள் கண்கள் உலர்ந்து விடும்.
  • ஆகவே உலர்வான கண்களில் இருந்து லென்ஸ் அகற்றப்படுவதால் எரிச்சல் ஏற்படலாம் , இதனால் சில நேரங்களில் கண்கள் சேதமடையலாம்.
  • லென்ஸ் அணிந்துகொண்டு குட்டி தூக்கம் போடுவதால் கூட கண்கள் பாதிப்படையுமா ?
  • 8 மணி நேரம் கண்களில் லென்ஸ் அணிந்தபடி உறங்குவது ஒரு நல்ல யோசனை அல்ல என்பது தெரியும் .

அப்படியென்றால் சில நிமிடங்கள் லென்ஸ் அணிந்த படி தூங்கி விழிக்கலாமா ? இதுவும் நல்லதல்ல.


நீங்கள் கண்களை மூடி தூங்கத் தொடங்கும் அந்த நொடியே கார்னியா ஒரு சிறு அளவு வீக்கமடையும்.

நீங்கள் எவ்வளவு நேரம் உறங்குகிறீர்களோ அந்த அளவு அபாயம் அதிகரிக்கும். 15 நிமிடங்கள் நீங்கள் லென்ஸ் அணிந்த படி உறங்கினாலும் கண்களின் மேற்பரப்பு அணுக்களில் பாக்டீரியாக்கள் படிந்துவிடலாம்.