வனிதாவின் சர்ச்சைகளை கண்டு யூடியூப் நிறுவனம் அனுப்பிய மெயில்.. அதிர்ந்துபோன வனிதாவின் பதில் என்ன?

1002

வனிதாவின் பீட்டர் பாலை விவாகரத்து செய்யாமல் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. பலரும் இருக்குற கொரோனா பிரச்சினையால் இதெல்லாம் தேவையா? என கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா, யாருங்க நீங்க? என்று கேட்டு யூடியூப் தனக்கு மெயில் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

யூடியூபில் எங்கே பார்த்தாலும் என்னுடைய முகம் தான் தெரிகிறது, இதனால் யூடியூபில் நிறுவனமே குழம்பிப்போய் உள்ளதாக வனிதா கூறியுள்ளார்.


மேலும், என்னை பற்றிய தகவல்கள் அதிகம் வருவதால் நீங்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், என யூடியூப் தனக்கு அனுப்பியுள்ள மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக வனிதா கூறியுள்ளார். இதனை பார்த்து நான் பெருமைப்படுவதா, சிரிப்பதா, கோபப்படுவதா என்று கூட தெரியவில்லை என வனிதா கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனத்தை அள்ளி வீசத்தொடங்கியுள்ளனர்.