வாரத்திற்கு 3 நாட்கள் பாகற்காய் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றம் நிகழும் என்ன தெரியுமா?

908

பாகற்காய்………….

வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பலர் அலண்டு ஓடிவிடுவார்கள். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்பு ஒன்று தான்.

பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது.

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாக உள்ளது.

வாரத்திற்கு 3 நாட்கள் பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்


  • பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு பெறலாம்.
  • தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.
  • பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.
  • உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுத்து விடலாம்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைந்து விடும்.
  • மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுத்து விடும்.
  • பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.

  • பாகற்காயின் கசப்பை நீக்க சில டிப்ஸ்
  • பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொண்டு அதில் சிறிது உப்பு மற்றும் புளித்தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஊறவைத்து , பின்னர் அதில் சேர்க்கப்பட்ட உப்புநீர் தனியே பிரிந்து விடும. பின்னர் அந்த தண்ணீரை வடித்துவிட்டு சமைத்தால் கசப்பு இருக்காது.
  • மெலிதாக நறுக்கிய பாகற்காயை அரை மணிநேரம் புளி தண்ணீரில் ஊறவைத்து பின் சமைத்தால் புளிப்பு இருக்கவே இருக்காது.

  • மிக மெல்லிய துண்டுகளாக பாகற்காயை நறுக்கிக் கொண்ட பின், கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். அதன்பின் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து சிறிது பிரட்டிவிட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் ஆலிவ் ஆயிலுடன் சிறுசிறு துண்டுகளாக பூண்டு அல்லது வெங்காயத்தையும் நறுக்கிப் போட வேண்டும். இது சமைக்கும்போது கசப்புத்தன்மையை நீக்குவதோடு சுவையையும் கூட்டும்.