விடாமல் துரத்திய தேனீ.. பயந்து ஓடிய வாலிபர் உடல் சிதறி பலி : மனைவிக்கு பிரசவம் பார்க்க வந்த இடத்தில் சோகம்!!

138

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேச மாநிலம் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் சோலங்கி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாயா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் திருமணமானது. திருமணமான நிலையில், சாயா கர்ப்பமுற்றிருந்தார்.

இந்த சூழலில் நேற்றைய முன்தினம் சாயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின் தனது சகோதரர் ராஜேஷ் உதவியோடு காண்ட்வா பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சாயாவை கொண்டு சென்றுள்ளார். அங்கே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே மனைவி மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு உறுதுணையாக சச்சினும், ராஜேஷும் மருத்துவமனையில் இருந்துள்ளனர்.

அப்போது சச்சின், மருத்துவமனை வளாகத்தில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் வந்த தேனீ கூட்டம் வந்துள்ளது. இதனால் பயந்துபோன சச்சின், ஓடியுள்ளார். அப்படியே 3-வது மாடிக்கு சென்ற சச்சின் அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தது.


அதன்பேரில் விரைந்த போலிஸார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள், சச்சினின் சகோதரர் கூற்றுப்படி, தேனீ தொல்லை காரணமாக மாடியில் இருந்து குதித்துள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, சச்சின் தற்கொலை செய்துகொண்டதாக கூறினர்.

இருப்பினும் அவரது போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகே எதுவும் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. தேனீ கடியில் இருந்து தப்பிக்க ஓடி சென்ற வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.