விடுதி அறையில் இளம் பெண்ணின் சடலம்.. காவலாளி செய்த கொடூரம் : நடந்தது என்ன?

541

மகாராஷ்டிரா…..

மகாராஷ்டிரா மாநிலம் மரைன் டிரைவ் பகுதியில் சாவித்ரிபாய் ஃபுலே என்ற பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விடுதி அறையில் 19 வயதான மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் சார்பில் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரைன் டிரைவ் காவல் நிலைய போலீஸார், வெளியில் பூட்டப்பட்டிருந்த அந்த மாணவியின் விடுதி அறையைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த மாணவியின் கழுத்தில் துப்பட்டா இறுக்கிக் கட்டியவாறு சடலமாகக் கிடந்துள்ளார்.

இதனை அடுத்து மாணவியின் உடலை அங்கிருந்த மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையும் படிங்க: போதைப் பொருள் விற்பனை கும்பல் கைது… ரூ.10.50 கோடி போதை மருந்து பறிமுதல்!பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தில் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளி யார் என்பது குறித்து விடுதி நிர்வாகம் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போதுதான் அந்த விடுதியின் காவலாளராக இருந்த ஓம்பிரகாஷ் கனோஜியா அங்கிருந்து காணாமல் போன விவகாரம் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.இதனை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்குள் ஓம்பிரகாஷ் கனோஜியா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அவரின் உடலையும் போலீஸார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதை என்று கூறுவதை போல பெண்கள் விடுதியின் காவலராக இருந்த நபரே மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.