விற்பனையாகாத லாட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரரான வியாபாரி!!

4118

கேரளாவில்..

கேரளாவில் விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ருபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் ஏஜென்ட் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கேரள அரசு அனைத்து நாட்களும் குலுக்கல் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்த வாராந்திர லாட்டரிகளுக்கு முதல் பரிசாக 70 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பரிதொகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் சுமார் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. கேரள லாட்டரி விற்பனை வரலாற்றில் இதுவே அதிகம் என கூறப்படுகிறது.

இதுவரை ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டுதான் 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. கேரள மாநிலம் கோழிக்கோடு அதோலி பகுதியை சேர்ந்தவர் என்கே காங்காதரன். இவர் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் கண்டக்டராக பணியாற்றி வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அதோலி பகுதியில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் கங்காதரன் லாட்டரி ஏஜென்ட்டாகவும் உள்ளார். இந்நிலையில் விற்பனையாகாத டிக்கெட்டுகளை ஒப்படைக்க வங்கிக்கு சென்றபோதுதான் கங்காதரன் கொடுத்த டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது தெரியவந்துள்ளது.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் கங்காதரன். கடந்த 4 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்துவரும் காங்காதரனுக்கு இப்படி பரிசு கிடைப்பது இதுவே முதல் ஆகும். விற்பனையாகாத லாட்டரி டிக்கெட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் கங்காதரன்.