வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள்! அதிகாலையில் அங்கு கேட்ட அலறல் சத்தம்!!

990

இந்தியாவில் கணவன் மற்றும் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மனைவி ஷர்மிளா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மோகன் குடும்பத்தார் நான்கு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டின் ஒரே அறையில் நால்வரும் தூங்கி கொண்டிருந்தனர்.


அப்போது அதிகாலை 4 மணிக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து நால்வர் மீதும் இடிந்து விழுந்தது. இதையடுத்து நான்கு பேரும் வலியால் அலறி துடித்தனர்.

இதை கேட்டு அங்கு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில் நால்வரையும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர், ஆனால் மோகன் தவிர மூவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

மோகனை மீட்டு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், மோகன் குடும்பத்தார் வசித்த வீடு 45 வருடங்கள் பழமையானது.

அதன் கூரை முற்றிலுமாக பாழடைந்ததோடு, சமீபத்தில் உடைய தொடங்கியது. இது குறித்து மோகன் வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். நில உரிமையாளர் கூரையை சரிசெய்ய முயற்சியை தொடங்கிய சூழலிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளனர்.