வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கை, கால்களை கட்டி வைத்து கொடூரம்!!

357

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுமதி (45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக ஊரக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் கதவு நீண்ட நேரம் திறந்து கிடந்தது.

அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சுமதி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் தலையில் பலமாக அடிபட்ட நிலையில் ரத்தம் கொட்டியது. மேலும், அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, ​​நேற்று நள்ளிரவு, அங்கு வந்த மர்ம நபர்கள், சுமதியை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். எதிர்த்ததற்காக சுமதியின் கைகள் கட்டப்பட்டிருக்கலாம். அவரது விடாப்பிடியான எதிர்ப்பின் காரணமாக அவர்கள் அவரை அடித்துக் கொன்றார்களா? அல்லது பலாத்கார முயற்சியில் அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.