வெளிநாடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய தங்க பு தையல்!

388

துருக்கியில்………….

துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.

இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன்.

கொரோனா காலத்தில் இப்படி ஓர் அதிர்ஷ்ட வரவு. புதையல் கிடைத்ததை அடுத்து, பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.


துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. கடந்த, 2018ல் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 77 ஆயிரம் கோடி டாலராகும்.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உர நிறுவனத்தின் பங்கு விலையும் ஏகத்துக்கு அதிகரித்துள்ளது. அண்மையில், 38 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம், ஒரு பெரிய சாதனையை துருக்கி படைத்துள்ளது.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி, 100 டன்னாக உயரும் என, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர்பாத்தி டான்மெஸ் தெரிவித்துள்ளார்.