வெளிநாட்டில் கணவன் : சொந்த ஊரில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

952

தமிழகத்தில் மகளுக்கு ஆசை, ஆசையாக திருமண ஏற்பாடு செய்து வந்த தாய், பணியின் போது இயந்திரத்தில் அவரின் கை சிக்கியதால் து ண்டாகி சிகிச்சை பெற்று வருவது பெரும் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருபவர் ரேவதி. 45 வயதான இவருக்கு செந்தில்குமார் என்ற கணவர் உள்ளார்.

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரேவதி பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எடுத்துவரப்படும் குப்பைகளை பிரித்தெடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

அதன் படி சம்பவ தினத்தன்று நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் உள்ள இயந்திரத்தில் குப்பைகள் பிரித்து கொண்டிருந்த போது, அப்போது திடீரென ரேவதியின் வலது கை இயந்திரத்தில் சி க்கியதால், அவரி கை துண்டானது.


இதனால் அ லறி து டித்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வரும் மாதம் ரேவதியின் மூத்த மகளுக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவரின் கைது துண்டானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் கணவராலும் வெளிநாட்டில் இருந்து கொரோனா வைரஸ் பிரச்சனையால் வர முடியவில்லை. கை ஓட்ட வைப்பது என்பது மிகவும் கடினம், அதற்கு என்று உயரிய சிகிச்சை செய்தால் மட்டுமே கையை ஓட்ட வைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால்,

ஒற்றை ஆளாக மகளின் திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து வந்த அவர், தற்போது மகளின் திருமணத்தை நினைத்து மிகுந்த வேதனையில் உள்ளார்.

இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கூறுகையில், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ரேவதி பணி செய்து வந்தார்.

அவரது மகள்கள் தனியார் மருத்துவமனையில் அம்மாவை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். அதன் படி அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அவருக்கு தற்போதைக்கு 50,000 ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் பணம் கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.