ஷாலினியை மணக்கப் போகும் ஜெயம் பட ஹீரோ! இணையத்தில் கசிந்த நிச்சயதார்த்த புகைப்படம்…. இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்!!

920

தெலுங்கு ஜெயம் படத்தின் ஹீரோ நித்தினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஷாலினியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் தற்போது அவரை நிச்சயம் செய்துள்ளார்.

இயக்குநர் தேஜா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நித்தின். இந்த படத்தில் சதா ஹீரோயினாகவும், கோபிசந்த் வில்லனாகவும் நடித்து இருந்தனர்.

தெலுங்கின் டாப் நடிகராக வலம் வரும் நித்தினின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஆனால், எதிர்பாராத விதமாக போடப்பட்ட கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது திருமணம் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போனது. இந்நிலையில், தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.