இளம் தலைமுறை நடிகர்களில் தலைகனமற்ற நடிகராக விளங்கியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஜூன் 14, 2020 அன்று மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரத்தில் இருந்து வெளிவர முடியாமல் ரசிகர்கள், உறவினர்கள் தவித்து வருகிறார்கள். உண்மையை நேர்மையாக உரைக்கும் குணம் கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத், 10 முறை தனது டீ-ஷர்ட் வாசகங்கள் மூலம் தனது விருப்பங்கள் குறித்து விவரித்து சென்றுள்ளார். அதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
02. No photos allowed
புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை என டீ-ஷர்ட் அணிந்தும் புகைப்படம் எடுத்துள்ளார்கள் பாருங்களேன்.
03. Comfortably single
சிங்கிளாகவே சந்தோசமாக இருக்கேன் என குறிக்கும் டீ-ஷர்ட். இது அவரது நீண்ட கால காதல் பிரிவை குறிக்கிறதோ?!
04. Brotherhood
தனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு என கூறி இருந்தார் சுஷாந்த். ஆனால், இருந்த குறைவான நண்பர்களுடன் மிக நெருக்கமாக உண்மையாக இருந்தார் சுஷாந்த்.
05. The truth will set you free
சுஷாந்த் போராட்ட குணம் கொண்டவர். எப்போதும் உண்மையாக இருந்து வந்தார். அதை குறிக்கும் வகையில் இருக்கிறது இந்த டீ-ஷர்ட் வாசகம்.
06. Psycho
தான் இருக்கும் இடம் மற்றும் தன்னை சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக வைத்து கொள்ளும் குறும்புக்கார நபராக இருந்தார் சுஷாந்த்.
07. Hate/Love
ஒவ்வொரு படத்தின் போதும், இவர் உடன் நடிக்கும் நடிகையுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார் சுஷாந்த். ஆனால், இவர் காதலித்து என்னவோ ஒரு பெண்ணை மட்டும் தான்.
08. Dreamer
இது நூற்றுக்கு நூறு உண்மை. சுஷாந்த் சிங் ராஜ்புத் நிறைய கனவுகள் கொண்டிருந்தார்.
09. F_ck fame
ஃ*க் ஃபேம், சுஷாந்த் புகழ்ச்சிக்கு மயங்காத நபர். புகழ்ச்சி போதையில் இருப்பவர்களையும் விரும்பாதவர்.
10. Wild one
சுஷாந்த் அறிவு சார்ந்தும், வாழ்க்கையை வாழும் விதத்திலும் தனித்துவமாக விளங்கினார்.
11. Chic, no?
ஆம்! சுஷாந்த் அழகானவர், மேலும் அவர் திறமையானவர், உண்மையானவர். அதனால் தான் அவர் மரணத்தை தாங்கி கொள்ள முடியாமல் நிறைய தவித்து வருகிறார்கள்.