100 ஏக்கரில் வீடு, 2 கோடி ஆடி கார்.. ராஜாவாக வாழும் ராஜமவுலியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

858

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக அனைவராலும் மதிக்கப்படுவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி(S. S. Rajamouli). பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியாவில் நம்பர் ஒன் டைரக்டராக மாறிவிட்டார்.

பாகுபலி படங்களுக்கு மட்டுமே சுமார் 100 கோடிகளுக்கு மேல் அவருக்கு சம்பளம் கொடுத்ததாக தெரிகிறது. பாகுபலி படங்கள் மொத்தமாக 2,500 முதல் 3,000 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனராக வலம் வருகிறார் ராஜமௌலி. குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் தன்னுடைய திறமையால் தற்போது உலகமே போற்றும் இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் அனைவரும் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் RRR. தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் எனும் பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி.


அதில் ராஜமௌலியின் சம்பளம் மட்டுமே 100 கோடி என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் நல்கொண்டா பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் 100 கோடி பரப்பளவில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார்.

சுமார் எட்டு படுக்கை அறைகள், மினி தியேட்டர், சுற்றியும் இயற்கை உணவுகளுக்கு தோட்டங்கள், கிரிக்கெட், வாலிபால், பேஸ்கட் மைதானங்கள் ஆகியவை தயாராகி வருகிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில்தான் ஒன்றரை கோடி செலவில் புதிய ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியின் மொத்த சொத்து மதிப்பு தற்போது வரை சுமார் 1500 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

விருப்பப்பட்ட விஷயத்துக்காக முழுமூச்சுடன் உண்மையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ராஜமவுலி ஒரு எடுத்துக்காட்டு எனவும் கூறலாம்.