தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் இளைய திலகம் பிரபு. இவர் பிரபல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன் அளவுக்கு பெரிய அளவு புகழ் பெறவில்லை என்றாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் பிரபு. பிரபு படம் ஒன்று 13 மொழிகளில் ரீமேக்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அதிக மொழிகளில் ரீமேக் ஆன திரைப்படமாகவும் இது கொண்டாடப்படுகிறது. பிரபு, பிரபுதேவா, காயத்ரி ரகுராம், அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் சார்லி சாப்ளின்.
இன்றும் அந்த திரைப்படத்தை டிவியில் போட்டால் டிஆர்பி ரேட்டிங் நன்றாகவே இருக்கிறது. இந்த படத்தை எழுதி இயக்கியவர் சக்தி சிதம்பரம். அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் மிகப்பெரிய வசூலை குவித்த படம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் படம் இந்தியாவில் உள்ள 13 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளதாம். ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனை படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் பெயரை கெடுக்கும் வகையில் அந்த படம் அமைந்துவிட்டதாக பல விமர்சனங்கள் வெளிவந்ததும் மறக்க முடியாத ஒன்று.