13 வயதில் பிரபல பைக் ரேஸ் சாம்பியன்… பந்தய விபத்தில் நேர்ந்த சோகம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

1153

காஞ்சிபுரம்..

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில் வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயம் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெங்களூரைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார்.


மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹரீஷ் திடீரென எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில், ஸ்ரேயாஸ் ஹரீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக போட்டிக் குழுவினர் ஸ்ரேயாஸ் ஹரீஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரேயாஸ் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரேயாஸ் ஹரீஷின் திடீர் மரணத்தையடுத்து, பைக் ரேஸ் பந்தயம் உடனடியாக நிறுத்தப்பட்டது.