16 வயதில் திருமணம்.. ஆசிரமத்தில் குழந்தை.. நர்சிங் மாணவியை கொன்று ஸ்டேடஸ் வைத்த காதலன்.. திடுக்கிடும் தகவல்கள்!!

51

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பவுசியா என்கிற 20 வயது இளம்பெண் சென்னை அடுத்த குரோம்பேட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப் படிப்பு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். அருகிலுள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். பவுசியாவும் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஆஷிக் என்கிற இளைஞனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி குரோம்பேட்டை வரும் ஆஷிக், சில நாட்கள் பவுசியாவுடன் ஹோட்டலில் அறை எடுத்து தனிமையில் தங்கி இருந்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் ஆஷிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து குரோம்பேட்டை வந்துள்ளார்.

இதனையடுத்து கல்லூரிக்கு செல்லாத பவுசியா, ஆஷிக்குடன் 3 அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து 3 நாட்கள் ஒன்றாகத் தங்கியுள்ளார். தனிமையில் இருந்தபோது ஆஷிக் செல்போனை எடுத்துப் பார்த்த பவுசியா, பல பெண்களுடன் ஆஷிக் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஆஷிக்கிடம் கேட்டு கடுமையான சண்டை போட்டுள்ளார்.


இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் கடுமையான ஆத்திரமடைந்த ஆஷிக், தான் அணிந்திருந்த டி-ஷார்ட்டால் பவுசியாவின் கழுத்தைப் இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பவுசியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் விடாமல் இறந்து கிடந்த பவுசியாவை புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனைப் பார்த்து பதறிப் போன அவருடன் விடுதியில் தங்கி இருந்த சக தோழிகள் உடனடியாக ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

பவுசியா இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், பவுசியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஆஷிக்கை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, 16 வயது இருக்கும்போதே ஆஷிக்கும் பவுசியாவும் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்ட நிலையில், பவுசியா கறுவுற்று குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை தற்போது கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறது. 16 வயதிலேயே திருமணம் செய்துகொண்டதால் கேரள போலீசார் ஆஷிக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு இருவரும் பிரிந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ஆஷிக், பவுசியாவுடன் மீண்டும் பழகத் தொடங்கியுள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பவுசியாவை ஆஷிக் அடிக்கடி சந்தித்துள்ளார். அந்த வகையில் நேற்று சந்தித்தபோதுதான்,

பெண்களுடன் தொடர்பில் உள்ள புகைப்படங்களை பார்த்துவிட்டு பவுசியா பிரச்னை செய்ததால் காதலி என்றும் பாராமல் கொலை செய்துள்ளார் என்று போலீசார் விவரித்துள்ளனர். இதனையடுத்து, ஆஷிக் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.