17 வயது குறைவான நடிகையுடன் திருமணம்.. ஆர்யாவை கலாய்த்து தள்ளிய முன்னாள் காதலி அபர்ணதி!!

82

அபர்ணதி..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் பெரிய வெற்றியை கொடுக்காமல் இருக்கிறார். சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது.

சில ஆண்டுகளுக்கு முன் செய்து திருமணம் செய்ய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 18 பெண்களுடன் ரொமான்ஸ் செய்திருந்தார். ஆனால் கடைசியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாதது சர்ச்சைக்குள்ளானது.

அதனை தொடர்ந்து தன்னுடன் நடித்த தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார். ஆர்யாவின் நினைப்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் நடிகை அபர்ணதி.


தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அபர்ணதி இன்னும் ஆர்யாவின் பெயரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆர்யா, சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதை பற்றி அபர்ணதியிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஆர்யா, கல்யாணமான அங்கிள் அவ்வளவு தான் என்று கலாய்த்திருக்கிறார்.