2 குழந்தைகளுடன் தாய் மர்மச்சாவு.. பூட்டிய வீட்டில் சடலங்கள் மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்!!

254

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் தாசரகோப்பலைச் சேர்ந்தவர் தீர்த்தா. இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு சிஞ்சு(7), பவன்(10) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். தீர்த்தா பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இன்று வேலைக்குச் சென்ற தீர்த்தா, தனது மனைவி சிவம்மாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவரது அழைப்புக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மீண்டும், மீண்டும் போன் செய்தும், அவரது மனைவி சிவம்மா, பதில் அளிக்கவில்லை. இதனால் பதறிப்போன, தீர்த்தா வீட்டிற்கு வந்தார். ஆனால், வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் தீர்த்தா கதவைத் தட்டினார். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று தீர்த்தா பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். அங்கு அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்தனர்.

வீட்டின் ஹாலுக்கும், சமையலறைக்கும் இடைப்பட்ட இடத்தில் மூன்று சடலங்களும் கிடந்தன. அத்துடன் கியாஸ் சிலிண்டர் திறந்திருந்தது. கியாஸ் கசிவால் அவர்கள் மூவரும் இறந்திருக்க முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மூவரும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்து பென்ஷன்மொஹல்லா காவல் நிலையத்திற்கு தீர்த்தா தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார், சிவம்மா அவரது குழந்தைகள் சிஞ்சு, பவன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர். பூட்டிய வீட்டிற்குள் தாய், 2 குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.