2 முறை கர்ப்பம்.. இளம் பெண்ணை சகோதரருடன் சேர்ந்து சீரழித்த போலீஸ் : அதிர்ச்சி சம்பவம்!!

1069

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் 23 வயது பெண்ணை பல நாட்கள் சிறையில் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது.

சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இம்ரான் மிர்சா என்ற போலீஸ்காரருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை ஒரு குடியிருப்பில் வைத்திருந்தார்.

இதனிடையே இம்ரான் மற்றும் அவரது சகோதரரும் போலீஸ்காரருமான ஃபுர்கான் ஆகிய இருவரும் அந்த இளம் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஷாம்லியில் வசிக்கும் இம்ரான், சமீபத்தில் அவளை தனது சொந்த ஊரில் ஒரு வாடகை குடியிருப்பில் இரண்டு மாதங்கள் வைத்திருந்தார். அங்கு அவரது சகோதரர் ஃபுர்கான் உடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், தான் இரண்டு முறை கர்ப்பமானதாகவும், இரண்டு முறையும் இம்ரானால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here