2 ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து மரணம்… விளையாடிய போது நேர்ந்த சோகம்!!

230

வேலூரில்..

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர், இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இளைய மகள் 7வயது யோகேஸ்வரி. இவர் ர்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கலந்து கொள்வதற்காக யோகேஸ்வரி தந்தை மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார்.

வரி பிளாஸ்டிக் பந்து கொண்ட போட்டியில் யோகேஸ்வரி கலந்து கொண்டார். அதில் விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுதாகர் மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.


அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையறிந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.