22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான உறவு: அந்த முதல் காதலை மறக்க முடியாமல் தற்போது தேடும் சுவிஸ் பெண்மணி!!

574

சுவிட்சர்லாந்தின் Triesen பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து ஓராண்டு காலம் காதலித்த நபரை பெண் ஒருவர் தற்போது தேடி வருகிறார்.

24 வயதான கொரினாவும் 31 வயதான பீற்றரும் 22 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக ட்ரைசனில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்துள்ளனர்.

அன்றைய தினம் இருவரும் ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்ததுடன், அதே நாளில் நடன அரங்கில் வைத்தும் சந்தித்துள்ளனர்.

அந்த இரவு முழுவதும் நடன அரங்கில் இருவரும் ஆடி மகிழ்ந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.


அந்த நேரத்தில் பீற்றர் ரோர்சாக்கில் வசித்து வந்துள்ளார், கொரினா வோரார்ல்பெர்க்கில் வசித்து வந்தார். பெரும்பாலும் இவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் இந்த உறவு ஓராண்டு காலம் மட்டுமே நீடித்துள்ளது. பின்னர் கொரினா மற்றும் பீற்றர் வேறு நபர்களைக் காதலித்து, இருவரும் தங்கள் சொந்த குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் கொரொனா Liechtenstein பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். மட்டுமின்றி அதன் பின்னர் இருவரும் சந்திக்கவே இல்லை என குறிப்பிட்டுள்ளார் கொரினா. இதனிடையே, 2018 ஆம் ஆண்டு கொரினா திடீரென்று எதிர்பாராத விதமாக மீண்டும் பீற்றரை சந்தித்துள்ளார்.

கணவருடன் இருந்த கொரினா பீற்றரை தனியாக சந்தித்து, தங்கள் நட்பை மீண்டும் புதிப்பித்துக் கொண்டுள்ளார். மட்டுமின்றி, பீற்றரின் தொலைபேசி இலக்கத்தையும் கொரினா பெற்றுள்ளார். அந்த நேரத்தில் கொரினா இன்னொருவருடன் திருமண பந்தத்தில் இருந்தார். மட்டுமின்றி பீற்றரின் தொலைபேசி எண்ணையும் கொரினா தவறவிட்டார்.

இருப்பினும், பீற்றரை அவரால் மிக சாதாரணமாக மறக்க முடியவில்லை. தற்போது திருமண பங்தம் முறிந்து ஒன்றரை ஆண்டுகளாக தனியாக இருக்கும் கொரினா தமது முதல் காதலரான பீற்றரை சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

தொலைத்த தமது காதலுக்காக முதல் முயற்சியை தமது பங்கிற்கு எடுத்துள்ளதாக கூறும் கொரினா, காலம் உரிய பதிலை தரட்டும் என காத்திருக்கிறார்.