24 வயது மகனை திருமணம் செய்து கொண்ட 65 வயது பெண்மணி! காரணம் என்ன தெரியுமா?

805

ஏம்பா கிமரெங்க் என்ற 65 வயது பெண்மணி இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அர்தி வராத் என்ற 24 வயது இளைஞனை தனது மகனாக தத்து எடுத்துக்கொண்டார். ஏம்பா ஏற்கனவே 3 இளம்பெண்களை தத்தெடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நான்காவதாக மகன் ஒருவரையும் தத்தெடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார்.

மகனாக தத்து எடுத்துக்கொண்ட அர்த்தியை, ஏம்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அந்த 65 பெண்ணிடம் கேட்ட பொழுது, முதலில் என்னுடைய வளர்ப்பு மகனை வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொள் என்று கூறினேன். ஆனால் அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார். இதனை அடுத்து நாங்கள் ஒருவரை ஒருவர் பிடித்து திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினார்.


பொதுவாகவே இந்தோனேஷியாவில் வசித்து வரும் இஸ்லாமிய மக்கள் வரதட்சணையாக தங்களால் இயன்றதை பெண் வீட்டாருக்கு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அர்தி, நான் திருமணம் செய்து கொண்ட ஏம்பாவிற்கு, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 203 ரூபாய் வரதட்சணையாக அளித்திருக்கிறார். இந்தோனேஷியாவை பொறுத்தவரையில் இம்மாதிரியான அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணங்கள் நடைபெறுவது ஒன்றும் புதிது கிடையாது.

சமீபத்தில் கூட நூறு வயது கொண்ட முதியவர் ஒருவர் சுமார் இருபது வயது கொண்ட இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.