3 முன்னணி நடிகர்கள் வெளியிடும் பெண்குயின் டிரைலர்.. அமேசான் பிரைமில் நேரடி ரிலீஸ்!

858

சில நாட்களுக்கு முன்பு பெண்குயின் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கண்களிலும் பதட்டத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று அப்படித்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

இந்தப்படம் தென்னிந்தியாவில் மூன்று முக்கிய மொழிகளில் வெளியிடப்படுவதால் அந்தந்த மொழிகளிலுள்ள மிகப் பிரபலமான முன்னணி நடிகர்களை வைத்து இதன் டிரைலர் வெளியிடப்படுகிறது.

ஏற்கனவே இதன் டீசரை பார்த்துவிட்டு பலரும் இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என யோசித்து வரும் வேளையில் இப்போது இந்த மூன்று முன்னணி நடிகர்கள் இதன் டிரைலரை வெளியிடுவதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடுகிறது.

அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கிறார். நடிகையர் திலகத்திற்கு பின் இவர் கதையின் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் பலராலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே இந்த படம் ஏதோ ஒன்றை வித்தியாசமாக சொல்ல வருகிறது என அனைவரும் எதிர் பார்த்து வந்த வேளையில் தற்போது அதன் டிரைலர் மூன்று மொழி உச்ச நட்சத்திரங்களை கொண்டு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு பெண்குயின் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது டிரைலரை வெளியிடுவதில் ஒரு படி மேலே போயுள்ளது பெண்குயின் டீம். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளில் வெளியிட படுவதால் மூன்று மொழிகளிலும் உச்ச நடிகர்களாக வலம் வரும் சூப்பர் ஹீரோக்களை கொண்டு இந்த டிரைலர் வெளியிடப்படுகிறது.


தெலுங்கு திரைப்படத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகர் நானி ஆவார். இவரை நேச்சுரல் ஸ்டார் என ரசிகர்கள் அன்போடு அழைத்து வரும் இவர் தேர்ந்தெடுக்கும் படங்களிலும் நடிக்கும் கதாபாத்திரங்களிலும் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதல் முதலாக வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் இன்று பெண்குயின் படத்தின் தெலுங்கு டிரைலரை வெளியிடுகிறார்.

இந்திய திரைதுறையில் மோகன்லாலை தெரியாதவர்கள் இருப்பது அரிது பெரும்பான்மையான மக்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர். இவரின் படங்கள் பலவும் இந்திய அளவில் மிகவும் பேசப்பட்டு வருகிறது இன்னும் சொல்லப்போனால் இவரது பல படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய ஹிட் அடித்துள்ளது. அவ்வாறு ரீமேக் செய்யப்பட்ட படங்களில் ஒன்று திரிஷ்யம். இந்த படம் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் அள்ளியது. இவ்வாறு மலையாள மக்களுக்கு ரொம்பவும் பிடித்த இவர் தற்போது பெண்குயின் படத்தின் மலையாள டிரைலரை வெளியிடுகிறார்.

சிலருக்கு வெற்றி உடனே கிடைத்துவிடும், சிலருக்கு பல அவமானங்களை தாண்டி போராடிய பின்னர் கிடைக்கும். அவ்வாறு தற்போது தனக்கென ஒரு நிலையான இடத்தைத் தமிழ் சினிமாவில் போராடி பெற்றுள்ளார் தனுஷ். இவரின் பல படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நடிப்பிற்காக பேசப்பட்டு வருகிறது. இவர் நடித்த புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என நடித்த பல படங்கள் மாஸ்டர் பீஸ் என ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவராலும் கொண்டாடப்பட்டுள்ளது. இவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். இவர் தற்போது தமிழில் வெளியாக உள்ள பெண்குயின் படத்தின் தமிழ் டிரைலரை தனது சமூகவலைதளத்தில் இன்று வெளியிடுகிறார்.

இவ்வாறு பல பிரபலங்கள் பெண்குயின் படத்திற்காக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான கூடுதல் எதிர்பார்ப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. டிரைலர் இன்று வெளியாகி உள்ள நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.”