30 ஆண்டுகளாக அந்த பழக்கம்..! இறந்தபிறகு வயிற்றை கிழித்து பார்த்த மருத்துவர்கள் ஓட்டம்!!

1470

இறந்த ஒருவரின் நுரையீரலை மருத்துவர்கள் தானமாக பெற மறுத்த சம்பவம் சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

பொதுவாக மனிதர்கள் அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இறந்தபிறகு மண்ணிற்கு இரையாகும் உடல் உறுப்புகள் யாரோ ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்ற உதவும் என்பதற்காக உடல் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இறந்தவரின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக வழங்கு முன்வந்தனர். இதனை அடுத்து மருத்துவர்கள் இறந்தவரின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க முயற்சித்தனர்.

அப்போது, இறந்தவரின் நுரையீரல் மிகவும் கருப்பாக இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அவரது உடல் உறுப்புகளை தனமாக பெறுவதையும் நிறுத்திவைத்தனர். இதனை அடுத்து, இறந்தவரின் குடும்பத்தினத்திரம் விசாரித்தபோது, அவர் கடந்த 30 வருடங்களாக அளவுக்கு அதிகமாக புகை பிடித்தது தெரியவந்தது.


மேலும், ஒருமுறை சிகரெட் பிடிக்க தொடங்கினாள் தொடர்ந்து 3 அல்லது 4 சிகெரெட் வரை பிடித்துவிட்டுத்தான் நிறுத்துவாராம். இதனால் அவரது நுரையீரல் முழுவதும் கருப்பாக மாறி பயனற்றதாக மாறியுள்ளது.