300 ஏக்கர், 49 அறைகள் : அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

99

உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு கட்டப்பட்டுள்ள லண்டன் வீட்டை எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்று பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு என்றால் அது அம்பானி குடும்பத்தின் வீடாக தான் இருக்கும்.

இவர்களுடைய மும்பையில் உள்ள இல்லத்திற்கு ஆண்டிலியா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆண்டிலியாவைத் தவிர முகேஷ் அம்பானிக்கும் நீதா அம்பானிக்கும் லண்டனில் வீடு ஒன்று இருக்கிறது.


லண்டனில் உள்ள இந்த வீடானது 592 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த வீடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும்.

இதற்கு முன்பு கிங் சகோதரர்களான Chester, Hertford மற்றும் Witney இந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த வீடானது 300 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இங்கு 49 அறைகளும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளடக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

13 டென்னிஸ் மைதானங்கள், மூன்று உணவகங்கள் மற்றும் ஓய்வறைகள், ஒரு ஸ்பா மற்றும் உடற்பயிற்சி நிலையம் ஆகியவையும் காணப்படுகிறது. மேலும் இந்த வீட்டை முகேஷ் அம்பானி 592 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.