38 வருஷம் கழிச்சு பெற்ற தாயை முதல் முறையா பார்த்த பெண்.. கல்லும் கரையும் பின்னணி!!

1563

இலங்கையில்..

இணையத்தில அவ்வப்போது நிறைய உருக்கமான பின்னணி கொண்ட சம்பவங்கள் வைரலாகி, கேள்விப்படும் பலரையும் ஒரு நிமிடம் அப்படியே மனம் நொறுங்க வைக்கும்.

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவத்தை பற்றிய செய்தி தான், இணையத்தில் வெளியாகி பலரையும் மனம் உருக வைத்துள்ளது. இலங்கை நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பாக, பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

ஆனால் அந்த தம்பதியருக்கு கடும் பொருளாதார நெருக்கடி மிக்க சூழலும் நிலவி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி சில காரணங்கள் இருக்கவே, பெண் குழந்தையை அவர்களால் வளர்க்க முடியாத ஒரு இக்கட்டான சூழலும் உருவாகி உள்ளது.


இதனால் அந்த பெண் குழந்தை நன்றாக வளர வேண்டும் என மனதில் நினைத்து ஒரு நெதர்லாந்து தம்பதியருக்கு குழந்தையை தத்துக் கொடுக்கவும் அவர்கள் செய்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க நெதர்லாந்தில் வளர்ந்து வந்த அந்த பெண், தனது உண்மையான தாய் மற்றும் தந்தையை நேரில் காண வேண்டும் என்றும் விருப்பம் கொண்டுள்ளார். இதற்காக பல்வேறு கடின முயற்சிகளையும் அந்த பெண் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதாவது, பெற்றோரை காணும் முயற்சியில் இறங்கிய அந்த பெண், இலங்கைக்கு வரும் போதெல்லாம் தாயின் விபரங்களை திரட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, தொடர்ந்து மேற்கொண்ட இந்த முயற்சியில் தாயின் புகைப்படம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட சில விவரங்களை வைத்து அவர் பிறந்த வைத்தியசாலையை கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து, இறுதியில் தன்னை 38 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்த தாயையும் அவர் கண்டுள்ளார். மகளை அவர் கண்டதும் ஆனந்த கண்ணீரில் தாய் உடைந்து போனதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அவர்கள் இருவரும் அங்கே சில நேரம் பகிர்ந்து கொண்டு, பல்வேறு உருக்கமான தருணங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது. 38 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்ட விஷயம், தற்போது நெட்டிசன்கள் பலரையும் கூட மனம் உடைய வைத்துள்ளது.