4 வயதுச் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து 81 வயது முதியவர் செய்த கேவலமான செயல்!!

1239

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 81 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் பகுதிக்கு அருகே சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார் பங்கிம் சந்திர ராய்.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட பங்கிம் சந்திர ராய் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பிறகு சிறுமியை அருகில் உள்ள வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி தனது அந்தரங்க உறுப்புகளில் வலி இருப்பதாக கூறி அழுது கொண்டே பெற்றோரிடம் கூறி இருக்கிறாள்.

பிறகு சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் கஜோல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.


புகாரின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது வீட்டிலிருந்து போலீசார் ராயை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.