50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை..! கும்மென்று இருந்தவர் இப்படி ஆக என்ன காரணம்..?

1079

பிரபல நடிகை குஷ்பு தனது உடல் எடையை பயங்கரமாக குறைத்து தற்போது உள்ள முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல் ,சத்யராஜ் ,கார்த்திக் ,சரத்குமார் போன்ற பல்வேறு கதாநாயகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்புவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து சீரியல்களில் நடித்து வந்த நடிகை குஷ்பு தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்பு தற்போது தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம்மாக இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் தனது அழகிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை குஷ்புவின் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் குஷ்புவா இது என்று ஆச்சரியத்தில் வாயடைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் உங்களுக்கு வயசே ஆகவில்லை மேடம். இன்னும் அப்படியே இருக்கிறீர்கள் என்று அவரை வர்ணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.