6 வயது சிறுவனின் மர்ம மரணம்: யார் குற்றவாளி? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை..!

594

தமிழகத்தில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது வளர்ப்பு தந்தையே குற்றவாளி என தெரியவந்துள்ளது.

நாமக்கலின் பள்ளிபாளையம் அருகே உள்ள பூலக் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.

பழ வியாபாரியான இவர் மனைவி பிரிந்து விட்டு, தன்னுடைய மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழும் சரோஜினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், 6 வயதில் டேனியல் என்ற மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வரும் விளையாடும் போது சண்டையிட்டுள்ளனர்.

இதில் கீழே விழுந்த டேனியல் தலையில் பலத்த காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை குழந்தை டேனியலை, உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை அடித்துக் கொல்லப்பட்டதாக சான்று அளித்தனர்.

இதனை தொடர்ந்து சக்திவேலிடம் பொலிசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதாவது, டேனியலை அடித்ததால் சுவற்றில் விழுந்து காயமடைந்து சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும்போது உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பழ வியாபாரி சக்திவேலை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here