9-வது கணவனால் கொல்லப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

677

இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆண்களுடன் பழகி திருமணம் செய்வதை வழக்காம கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் 9-வது கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தின் Pahadi Shareef எல்லைக்குட் பகுதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆந்திரப்பிரதேசத்தின் Kurnool மாவட்டத்தின் Jalpally-ஐ சொந்த ஊராக கொண்டவர் நாகராஜு.

கேப் டிரைவரான இவருக்கும், ஹைதராபாத்தின் Katedan தொழிற் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த 30 வயது மதிக்கத்தக்க வரலட்சுமி என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.


இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன் படி வரலட்சுமி தன்னுடைய கணவர் மற்றும் மகனையும் விட்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகராஜுவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில மாதங்களிலே வரலட்சுமி, அப்பகுதியில் இருக்கும் மற்ற ஆண்களுடன் பழகத் துவங்கியுள்ளார். இதனால் இந்த தம்பதிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

அதன் படி சம்பவ தினத்தன்று, அதாவது கடந்த செவ்வாய் கிழமை அவர்களிடம் இருந்து சற்று விலகியிருக்கும் படி நாகராஜு மனைவியை எச்சரித்துள்ளார். இது பெரிய வாக்குவாதமாக மாற, நாகராஜு ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து வரலட்சுமியின் கழுத்தில் குத்திவிட்டு, அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் இந்த சம்பவம் குறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வரலட்சுமி, நாகராஜுவுக்கு ஒன்பதாவது கணவர் என்பது தெரியவந்துள்ளது.

இப்படி ஒரு ஆணுடன் பழக்கம் வைத்து, அதன் பின் அவரை திருமணம் செயது, அவர்களை விட்டு வேறொரு நபருடன் பழக்கம் வைப்பதையே இவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.