பின்க் நிற வாட்ஸ் அப்பால் பயனாளர்களின் விவரங்கள் திருட்டு! எச்சரிக்கையான தகவல்!!

427

வாட்ஸ் அப்…………

இணையத்தில் வாட்ஸ் அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என கூறும் பொய்யான தகவல் வேகமாக பரவி வருகிறது.

மேலும், இந்த தகவலுடன் வாட்ஸ்அப் பின்க் செயலியை டவுன்லோட் செய்யக் கூறி அதற்கான இணைய முகவரியும் வழங்கப்படுகிறது.

இதனை க்ளிக் செய்தால், ஸ்மார்ட்போனின் தீங்கு விளைவிக்கும் செயலி இன்ஸ்டால் ஆகிவிடும். அதன்பின்னர், செயலியை இன்ஸ்டால் செய்தவரின் விவரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும்.


இந்த செயலிக்கும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும், இதுபற்றிய விவரங்களை சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா வெளியிட்டு இருக்கிறார். அதில், செயலி வாட்ஸ்அப் இன்டர்பேஸ் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

போலி செயலி மூலம் முடிந்தவரை பயனர்களின் விவரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.