ஃபிரிட்ஜால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!!

270

ராஜபாளையத்தில்.

ராஜபாளையம் அருகே ஃப்ரிட்ஜில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வரகுணராமபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி வாணி (38). இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த தொடர்மழை காரணமாக வரகுணராமபுரம் பகுதி குடியிருப்புகளுக்கு அதிக அழுத்தத்தில் மின்சாரம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவின் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) மின்கசிவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையறியாத வாணி,

நேற்று காலை (22-ம் தேதி) தேநீர் தயாரிக்க பால் எடுப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறந்திருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் வாணி தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.


இந்த மின் விபத்தில், படுகாயமடைந்த வாணியை, குடும்ப உறுப்பினர்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வாணி, ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து, அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக, கீழராஜகுலராமன் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீஸார், வாணியின் இறப்பு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்” என்றனர்.