அடங்காத ஆசையால் பல ஆண்களுடன் தொடர்பு.. நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

513

விசாகப்பட்டினத்தில்..

விசாகப்பட்டினத்தில் உள்ளது ஜெகதம்பா என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சிராவணி என்ற பெண்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குண்டூரை சேர்ந்தவர் இவரது கணவர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால், திடீரென தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. இதனால், அடிக்கடி தகராறும், சண்டையும் இவர்களுக்குள் வந்து போனது.

கடைசியில் 2 பேருமே பிரிந்துவிட்டனர். சில மாதங்கள் கோவாவில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டில் வசித்து வந்தார் சிராவணி. பிறகு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, விசாகப்பட்டினம் வந்துவிட்டார். அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் சிராவணிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ணா ஒரு ஓவியர். பரவாடாவை சேர்ந்தவர். இருவருமே நெருங்கி பழகினார்கள். ஒருகட்டத்தில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். அதாவது கல்யாணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.

இவர்களது வாழ்வும், சிலநாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தது. இப்படிப்பட்ட சூழலில், சிராவணியின் நடத்தை மீது திடீரென கோபால கிருஷ்ணாவுக்கு டவுட் கிளம்பியது. சிராவணி, மற்ற ஆண்களுடன் நெருங்கி பழகுவது, கோபாலகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை.

இதை மையமாக வைத்தே இருவருக்குள்ளும் தகராறுகள் வெடித்தன.. ஆனால் உண்மையிலேயே, சிராவணி, வேறு சில ஆண்களுடன் போனில் பேசி வந்தாராம். இதை கண்ணெதிரே பார்த்துதான், தாங்கிக்கொள்ள முடியாமல், பலமுறை கோபால கிருஷ்ணா கண்டித்துள்ளார். ஆனாலும், சிராவணி ஆண் நண்பர்களிடம் பேசுவதை விடவில்லை. தொடர்ந்து அவர்களிடம் பழகி வந்ததாகவே கூறப்படுகிறது.

அதில் முக்கியமான நபர் வெங்கி என்பவர். இவருடன்தான் சிரோமணி நெருக்கமாக பேசி வந்தாராம். அதனால், இவரது பெயரை குறிப்பிட்டே, அவருடன் பழகக்கூடாது என்று கோபாலகிருஷ்ணா பலமுறை எச்சரித்திருக்கிறார்.

இதையும் சிராவணி பொருட்படுத்தவில்லை. செல்போனில் மெசேஜ் மூலமாக வெங்கியுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதை பார்த்த கோபாலகிருஷ்ணா ஆத்திரம் அடைந்ததுடன், சிராவணியை கொலை செய்யவும் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சிராவணியிடம், கேஷூவலாக பேசி விசாகப்பட்டினம் பீச் ரோட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருக்கும் கோகுல் பார்க் என்ற பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்திற்கு சென்றதுமே, வெங்கியுடன் பழகுவது குறித்து சிராவணியிடம் கேட்டுள்ளார்.

இதில், மறுபடியும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. வெங்கியுடன் தொடர்ந்து பழகுவேன் என்று சிரவாணி திடமாக சொல்லவும், அவரது கழுத்தை கொடூரமாக நெரித்தார் கோபால கிருஷ்ணன்.

இதில், அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார் சிரவாணி. இதற்கு பிறகு, கோபாலகிருஷ்ணா, தானாகவே மகாராணி பேட்டை போலீசுக்கு சென்று, சரணடைந்துவிட்டார்.

தன்னை போலவே வேறு ஆண்கள் சிரவாணியால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கொலை செய்துவிட்டதாக வாக்குமூலமும் தந்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து கோபாலகிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here