தற்போதைய கொரோனா வழக்குகளை விட ஆப்பிரிக்கா கண்டத்தில் மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவ வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் நோயின் தாக்கம் அதிகரிப்பதை காண தொடங்கியுள்ளதால் நான் இப்போது மிகவும் கவலைப்படுகிறேன் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை தலைவர் மைக்கேல் ரியான் கூறினார்.
இதுவரை, ஆப்பரிக்கா கண்டம் சுமார் 15,000 இறப்புகள் மற்றும் 7,25,000 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளுடன் ஹாட்ஸ்பாட்டாக மாறுவதைத் தவிர்க்க முடிந்தது.
ஆனால், ஆப்பரிக்கா கண்டத்தின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்ட கொரோனாவின் எழுச்சி,
ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளுக்கு என்ன நேரிடும் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்க வேண்டும்.
தென் ஆப்பரிக்கா நாட்டில் 3,70,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் 5,000 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இது தென் ஆப்பிரிக்கா குறித்த அழைப்பு மட்டுமல்ல, ஆப்பிரிக்கா கண்டத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரியான் கூறினார்.