அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ விமானங்கள்! நடுவானில் வைத்தே தடுத்து நிறுத்திய அமெரிக்க போர் விமானங்கள்!!

828

அமெரிக்கா – அலாஸ்கா வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் இடைநிறுத்தியது.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து வட அமெரிக்கா வான்வெளி பாதுகாப்பு கட்டளையகம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில்,

ரஷ்யாவின் விமானங்கள் அமெரிக்கா அல்லது கனடாவின் வான் வெளியில் நுழைய வில்லை. எனினும் அலாஸ்காவின் எல்மென்டார்பில் உள்ள விமான தளத்திலேயே அவற்றை அமெரிக்காவின் எஃப்-22 ரக போர் விமானங்கள் தடுத்து நிறுத்தின என்று தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் டியூ 142 ரக விமானம் இதுவரை 10 முறை அத்துமீறி அமெரிக்காவில் பறந்ததற்காக இடைமறித்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளை ரஷ்யாவில் கடந்த ஜூன் 19-ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் பறந்த அமெரிக்காவின் இரு பி 52 எனும் குண்டு வீசும் திறனுடைய விமானங்களை ரஷ்யா வானில் இடைமறித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில நேற்று அமெரிக்காவின் எல்லைக்குள் வந்த ரஷ்யாவின் டியூ 142 எனப்படும் டூபோலெப் டியூ 142 ரக விமானம் கடல் பகுதியில் ரோந்து செய்யும் விமானமாகும். இவை நீர் முழ்கி குண்டுவீசும் திறன் கொண்டவை.